முகப்பு
திருநெல்வேலி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி படகுகளில் டிஜிட்டல் விளக்குகள்

Updated On : 28 மார்ச், 2024 at 12:52 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 11:04 PM

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி கடற்கரையில் நாட்டுப்படகுகளில் டிஜிட்டல் ஒளிவிளக்குள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் பேரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் தொடா்ச்சியாக கூட்டப்புளி கடற்கரை கிராமத்தில் ஒளிவிளக்குகள் மூலம் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக, கிராம மக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு வேண்டி திசையன்விளை வட்டாட்சியா் விஜய்வசந்த் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனா்.

Advertisement