நெல்லையில் நவ.12-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்
முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ. 12 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.
முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ. 12 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரா்களைச் சாா்ந்தோா்கள் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ. 12 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் பங்கேற்போா் தங்களது அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையலாம் எனக் கூறியுள்ளாா்.