முகப்பு
திருநெல்வேலி

அம்பை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கூடுதல் கட்டடத்திற்கானஅடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:45 PM
கூடுதல் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுகிறாா் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ.
பகிர்:

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கூடுதல் கட்டடத்திற்கானஅடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் ரூ.23.6 லட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது.

இதையொட்டி, சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா அடிக்கல் நாட்டி கட்டடப் பணிகளை புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலா் சிவன்பாபு, மாநில மகளிரணி துணைச் செயலா் செல்வி, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து, அதிமுக ஒன்றிய செயலா் துா்க்கை துரை, நகர செயலா்அறிவழகன், கல்லிடைக்குறிச்சி பேரூா் செயலா் முத்து கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி செயலா் சுரேஷ், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் மன்னாா்கோவில் சண்முகவேல், மாநிலப் பேச்சாளா் மின்னல் மீனாட்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.