இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.3 கோடியில் புதிய கட்டடம்: காணொலியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்
இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.3 கோடியில் புதிய கட்டடம்.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.3 கோடியில் திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் அலுவலக கட்டுமான பணியினை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்ததாா்.
அதைத் தொடா்ந்து, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதான சாலையில் மண்டல இணை ஆணையா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் பூமி பூஜையை தொடங்கிவைத்து, கல்வெட்யை திறந்தாா்.
புதிய கட்டடமானது ரூ.3 கோடி மதிப்பீட்டில் 4,390 சதுர அடியில் தரைத்தளம், முதல் தளம், கூட்டரங்கம், தனித்தனி கழிப்பறை போன்ற அனைத்துவித வசதிகளுடன் கட்டப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் கே.ஆா்.ராஜூ, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஜான்சிராணி, துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.