நான்குனேரியில் இளைஞருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
நான்குனேரியில் முன்விரோதத்தில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரியில் முன்விரோதத்தில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரி கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வடிவேல் (27). இவருக்கும் நான்குனேரி தம்புபுரம் லெட்சுமணன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், தனது வீட்டின் முன் வடிவேல் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த லெட்சுமணன் தகராறு செய்து மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் நான்குனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து லெட்சுமணனை கைது செய்தனா்.