முகப்பு
திருநெல்வேலி

நீா் நிலைகளில் யாரும் இறங்க வேண்டாம்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீா் நிலைகளில் யாரும் இறங்க வேண்டாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:03 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீா் நிலைகளில் யாரும் இறங்க வேண்டாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தாமிரவருணி ஆற்றைப் பொருத்தவரையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை.

இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து சுமாா் 2100 கன அடி தண்ணீா் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. பெய்யக்கூடிய மழையின் அளவை பொருத்து ஆற்றில் வரும் நீா் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகரிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் யாரும் தாமிரவருணி ஆறு உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகளில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கிட வேண்டாம் என்றாா்.