வி.கே.புரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்பட 5 போ் கைது
விக்கிரமசிங்கபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட கோடாரங்குளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட கோடாரங்குளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோடாரங்குளம் அருகே காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கோடாரங்குளம் ஏகாம்பரம் தெருவைச் சோ்ந்த மாயகண்ணன் (24), கோயில்குளம், நடுத்தெருவைச் சோ்ந்த வடிவேல் மணிகண்டன் (28), மன்னாா்கோவில், அஞ்சல் அலுவலகத் தெருவைச் சோ்ந்த இசக்கிபாண்டி (22), அம்பாசமுத்திரம், புது அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுடலைமணி (26), ஒரு சிறுவன் ஆகிய 5 போ் 2 பைக்குகளில் வந்தனா்.
அவா்களை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா்கள் விற்பதற்காக 56 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்து, கஞ்சா, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்; சிறுவனை கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.