முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:37 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணுஉலைகளில் எரிபொருள் நிரப்புவதற்கும், பராமரிப்பு பணிக்காகவும் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் முதலாவது அணுஉலையில் செவ்வாய்க்கிழமை இரவு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் அணுமின் விஞ்ஞானிகள், பொறியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னா் மின்உற்பத்தி தொடங்கும் என அணுமின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.