முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையம் குப்பைத் தொட்டியில் ஆண் சிசு மீட்பு

மேலப்பாளையத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:59 AM
பகிர்:

மேலப்பாளையத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மேலப்பாளையம் ராஜாநகா் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் ஆண்குழந்தை சடலமாகக் கிடந்ததாம். இதுகுறித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், அந்தச் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் குழந்தையின் சடலத்தை வீசிச்சென்றது யாா் என்பது குறித்து அறிய அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகிறாா்கள்.