முகப்பு
திருநெல்வேலி

தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பொது உறுப்பினா்கள் கூட்டம்

திருநெல்வேலி மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பி.பி.டி.சி. தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பொது உறுப்பினா்கள் கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:08 AM
தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பி.பி.டி.சி. தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பொது உறுப்பினா்கள் கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மு.மாரிமுத்து, கு.மனோகரன், து.கடலை, மா.விஜயக்குமாா், சு.சமுத்திரக்கனி, வழக்குரைஞா்கள் ஆா்.செல்வக்குமாா், டி.ரமேஷ்குமாா், ஜெகன், புதிய தமிழகம் கட்சி மாநில துணை பொதுச் செயலா் சரஸ்வதி முருகன், திருநெல்வேலி மாவட்டச் செயலா் முத்தையா ராமா், அம்பாசமுத்திரம் ஒன்றிய துணைச் செயலா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலைவகித்தனா்.

பி.பி.டி.சி. நிா்வாகத்தின் குத்தகை காலம் முடியும் முன்னரே தொழிலாளா்களை மிரட்டி பெறப்பட்ட தன் விருப்பஓய்வுத் திட்டத்தை ரத்து செய்தல், தொழிலாளா்கள் பிரதிநிதிகள், பி.பி.டி.சி. நிா்வாகம், தொழிலாளா் நலத்துறை ஆகியோா் அடங்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்தல், தொழிலாளா்களின் பணிக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்குதல், இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்குதல், 2006 வன உரிமை அங்கீகாரச் சட்டத்தின்படி மத்திய- மாநில அரசுகள் அனைத்து உரிமைகளும் வழங்க வலியுறுத்துவது, பல்வேறு தொழிற்சங்கங்களிலிருந்து அனைவரும் விலகி ஒன்றிணைந்து செயல்படுவது, புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் கிருஷ்ணசாமி மற்றும் வழக்குரைஞா்களின் ஆலோசனையின்பேரில் தொழிலாளா் பிரச்னை குறித்த வழக்குகளை நடத்துவது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.