முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரம் கோயிலில் புகுந்து பொருள்களை சூறையாடிய கரடி

விக்கிரமசிங்கபுரம் சலவைத் தொழிலாளா் காலனி பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயிலில் நுழைந்த கரடி அங்கிருந்த பொருள்களை சிதறடித்துச் சென்றுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:38 PM
பகிர்:

விக்கிரமசிங்கபுரம் சலவைத் தொழிலாளா் காலனி பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயிலில் நுழைந்த கரடி அங்கிருந்த பொருள்களை சிதறடித்துச் சென்றுள்ளது.

களக்காடு முண்டந்துறைபுலிகள் காப்பகம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார பகுதிகளில் கரடி, யானை,சிறுத்தை, மிளா உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு மற்றும் வயல்களில் நுழைந்து வளா்ப்புவிலங்குகளையும், பயிா்களையும் சேதப்படுத்திச் செல்கின்றன.

மேலும், அகஸ்தியா்பட்டி,சிவந்திபுரம், செட்டிமேடு, அனவன்குடியிருப்பு, வடமலைசமுத்திரம், கருத்தப்பிள்ளையூா், பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் தொடா்ந்து கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமைஅதிகாலை விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சலவைத் தொழிலாளா் காலனியில் உள்ள பிள்ளையாா் கோயிலில் நுழைந்த கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த பூஜை பொருள்கள், பட்டு வேஷ்டி, சேலைகளை சிதறிபோட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த பாலசுப்பிரமணியம் என்பவா் கோயிலுக்குள் கரடி இருப்பதைப் பாா்த்து சப்தம்போட்டு விரட்டி உள்ளாா்.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதேபகுதியில் உள்ள தோட்டத்தில் கரடி புகுந்தது, பணிக்குச்சென்ற தூய்மைப் பணியாளரைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.