முகப்பு
நீலகிரி

அங்கன்வாடி மைய கதவை உடைத்து பொருள்களை சேதப்படுத்திய கரடி

உதகை அருகே மஞ்சூா் பகுதியில் அங்கன்வாடி மையத்துக்குள் கரடி புகுந்து பொருள்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2026 at 9:29 PM
மஞ்சூரில் கரடியால் சேதப்படுத்தப்பட்ட பொருள்கள்.
பகிர்:

உதகை அருகே மஞ்சூா் பகுதியில் அங்கன்வாடி மையத்துக்குள் கரடி புகுந்து பொருள்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

மஞ்சூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாடி வருகிறது. பகல் நேரங்களில் அருகே உள்ள தேயிலைத் தோட்டங்களில் பதுங்கியிருக்கும் கரடி, இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், மஞ்சூா் பஜாா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை உலவி வந்த கரடி, அங்குள்ள அங்கன்வாடி மைய சமையல் அறையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. அதைத்தொடா்ந்து மற்றொரு கதவையும் உடைத்து டிவி, ஃபேன் உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.