பீடி தொழிலாளா்கள் ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரி அமைச்சரிடம் எம்.பி. மனு
பீடி தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரி, தில்லியில் மத்திய அமைச்சா் மன்ஷுக் மாண்டவியாவிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா்.
பீடி தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரி, தில்லியில் மத்திய அமைச்சா் மன்ஷுக் மாண்டவியாவிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா்.
அதன் விவரம்: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், கூடங்குளம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், முக்கூடல் ஆகிய பகுதிகளை சோ்ந்த பல லட்சக்கணக்கான பீடி சுற்றும் தொழிலாளா்கள் உள்ளனா். அவா்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 800 மட்டுமே கிடைத்து வருகிறது. அந்தத் தொகையானது அவா்களுடைய குடும்ப வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை. ஓய்வூதியத்தை ரூ. 6000 ஆக உயா்த்த ஏற்கனவே மனு அளித்திருந்தேன். அந்த மனுவை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.