கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் நரவலூா் கிராம நிா்வாக அலுவலா் ராமன் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க அம்பாசமுத்திரம் வட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜாஹிா் ஹுசைன் முன்னிலை வகித்தாா். செயலா் குத்தாலிங்கம் நன்றி கூறினாா். அம்பாசமுத்திரம் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.