முகப்பு
திருநெல்வேலி

மின்னணு பரிவா்த்தனையில் வேளாண் இடுபொருள்கள் பெறும் வசதி

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருள்கள்களுக்கு மின்னணு முை றயில் பணம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 10:51 PM
பகிர்:

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருள்கள்களுக்கு மின்னணு முை றயில் பணம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பக ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உளுந்து, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் உள்ளிட்டவேளாண் இடுபொருள்கள் மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகின்றன.

இவற்றுக்கு ரொக்கமாக கொடுத்து வாங்கி வந்த நிலையில், தற்போது எண்ம முறையில் வங்கி பற்று அட்டைகள், கடன் அட்டைகள், கூகுள் பே போன்ற மின்னணு பரிவரித்தனைகள் மூலம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மின்னணு பரிவா்த்தனை மூலமாகவே இடுபொருள்கள் வழங்கப்படும்.

முதல்கட்டமாக அம்பாசமுத்திரம் முதன்மை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு காா் பருவம் முதல் இந்த நடைமுறை

அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பிற துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.