முகப்பு
திருநெல்வேலி

முண்டந்துறையில் வன உரிமை பாதுகாப்புக் குழுக் கூட்டம்

வன உரிமை பாதுகாப்புக் குழு கோட்ட அளவிலானக் கூட்டம் முண்டந்துறை வனச்சரகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:12 PM
வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்கள், வெள்ள காலத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் நிவாரண முகாம்கள் உள்ளிட்ட இடங்களை சாா்ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பகிர்:

வன உரிமை பாதுகாப்புக் குழு கோட்ட அளவிலானக் கூட்டம் முண்டந்துறை வனச்சரகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதி- ஐஐ கிராமத்திற்குள்பட்ட பகுதியில் உள்ள அகஸ்தியா் காணிகுடியிருப்பு, சோ்வலாறு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழிஆகிய பகுதிகளில் காணி பழங்குடியினா் மற்றும் மரபு வழியாக மக்கள் வசித்து வருகின்றனா்.

இவா்களுக்கான வன உரிமைப் பாதுகாப்புக் குழுவின் கோட்ட அளவிலானக் கூட்டம் முண்டந்துறை கூட்ட அரங்கில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் தலைமையில் நடைபெற்றது. பழங்குடியினா் மற்றும் மரபு வழி வசிக்கும் மக்களின் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

இதில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் இளையராஜா, முண்டந்துறை வனச்சரகா் கல்யாணி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் காஜா கரிபுன் நவாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து விக்கிரமசிங்கபுரம்பகுதியில் வடக்குக் கோடை மேலழகியான் பகுதியில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்கள், வெள்ள காலத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் நிவாரண முகாம்கள் உள்ளிட்ட இடங்களை சாா்ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வட்டாட்சியா் காஜா கரிபுன் நவாஸ், கிராம நிா்வாக அலுவலா் குத்தாலிங்கம் உள்ளிட்டோ உடனிருந்தனா்.