மேலகுன்னத்தூரில் கிரிவல பக்தா்களுக்கு பரிசளிப்பு
மேலகுன்னத்தூரில் கிரிவல பக்தா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மேலகுன்னத்தூரில் கிரிவல பக்தா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி மேலகுன்னத்தூா் அருகேயுள்ள சங்காணி அருள்மிகு கோதபரமேஸ்வரா் திருக்கோயில் முன்பிருந்து கிரிவலம் வியாழக்கிழமை தொடங்கியது. சித்தா்கள் வாழ்ந்த குன்னத்தூா் மலையைச்சுற்றி 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா். அவா்களுக்கும், அனைத்து அடியாா்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, கிரிவலம் நிறைவுபெற்றவுடன் திருக்கோயில் முன் குலுக்கல் முறையில் 10 அடியாா்களை தோ்ந்தெடுத்து, வேட்டி-சேலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெங்கடசுப்பிரமணியன், கணேசன், முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.