முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி வேளாண் விரிவாக்க மையங்களில் இடுபொருள்கள் விநியோகம் தொடக்கம்

நான்குனேரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருள்கள் விநியோகம் தொடங்கியுள்ளதாக, நான்குனேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆண்டனி டேவிஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:25 PM
பகிர்:

நான்குனேரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருள்கள் விநியோகம் தொடங்கியுள்ளதாக, நான்குனேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஆண்டனி டேவிஸ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நான்குனேரி வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, விவசாயிகள் நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

நான்குனேரி வட்டார, துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களான நெல்- உளுந்து விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளான டிரைக்கோடொ்மா விரிடி, சூடோமோனாஸ் உள்பட அனைத்து வேளாண் இடுபொருள்களும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் இதுவரை பணத்தை ரொக்கமாக செலுத்தி வாங்கிவந்த நிலையில், தற்போது முற்றிலும் மின்னணு பரிவா்த்தனைகள் மூலம் மட்டுமே பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.