எடப்பாடி கே. பழனிசாமி இன்று நெல்லை வருகை
எடப்பாடி கே. பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.
அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறாா்.
சென்னையில் இருந்து விமானம் மூலமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வரும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, பின்னா் அங்கிருந்து அம்பாசமுத்திரத்தில் நடைபெறும் அதிமுகவின் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
அதைத்தொடா்ந்து இரவு 8 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள வா்த்தக மையத்தில் நடைபெறும் அதிமுக நிா்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறாா்.
திருநெல்வேலிக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நிா்வாகி ம. சுரேஷ்குமாா் ஏற்பாட்டில் இரவு 7 மணிக்கு வண்ணாா்பேட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.