அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி படம்: எக்ஸ்!
தமிழ்நாடு

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் குறித்து கேள்விகளுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “181தொகுதிகளுக்கும் மேலாக எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டோம். எழுச்சிப் பயணம் மக்களிடையே மிகவும் எழுச்சியாக இருந்தது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கான வெற்றியை மக்கள் முகத்தில் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு தேர்தலில் மாறுபட்ட மக்களின் தீர்ப்பைத்தான் பார்க்க முடிகிறது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், 2021 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தல் வேறு; மக்களவைத் தேர்தல் வேறு.

அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையான கூட்டணியாக அமைந்திருக்கிறது. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. அதனால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. வருகிற தேர்தலில் சுமார் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. அதிமுகவில் இருந்தவர்கள் திமுகவில் கூட்டணியில் இருந்துள்ளனர். அதேபோல், அங்கு இருந்தவர்கள் இங்கு இருந்திருக்கின்றனர். கூட்டணியைப் பொறுத்துதான் வெற்றிவாய்ப்பு.

திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணிப் பிரச்னையில் தலையிட தார்மிகப் பொறுப்பு எங்களுக்கு இல்லை. இருதரப்பிலும் நீண்டகாலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது.

ஆட்சியில் பங்கு என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், “மத்திய அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிமுக தலைமை தாங்கும்.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அவர் தெளிபடுத்திவிட்டார். சில அரசியல் கட்சித் தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

எங்கள் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்த குழப்பமும் இல்லை. அதிமுக பெருவாரியான இடங்களில் வெற்றிபெறும். அதிமுக பெருவாரிய இடங்களில் வெற்றிபெற்று தனித்தே ஆட்சியமைக்கும்” எனத் தெரிவித்தார்.

AIADMK General Secretary and Leader of the Opposition Edappadi Palaniswami has said in an interview that there is no room for talk of chaos in the National Democratic Alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

புதுச்சேரி முதல்வரை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள்! தடியடி நடத்திய காவல்துறையினர்!

மடகாஸ்கரை புரட்டிப்போடும் கெஸானி புயல்! 20 பேர் பலி!

SCROLL FOR NEXT