முகப்பு
திருநெல்வேலி

கல்யாணிபுரம் அம்மன் கோயிலில் கொடை விழா

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட கல்யாணிபுரத்தில் கீழத்தெருவில் உள்ள வடக்குவாச் செல்வியம்மன் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:31 PM
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த வடக்குவாச் செல்வியம்மன்.
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட கல்யாணிபுரத்தில் கீழத்தெருவில் உள்ள வடக்குவாச் செல்வியம்மன் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த செப். 8ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து, மண்டல பூஜை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக். 23) கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி எடுத்து வழிபட்டனா். நாள்தோறும் கும்மிப் பாட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.