முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாநகரில் மிதமான மழை

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவில் மிதமான மழை பெய்தது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:41 PM
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை இரவு மழைநீரில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவில் மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் 10 நாள்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில், அதன்பிறகு பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்த நிலையில், வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, சாந்திநகா், கேடிசி நகா், திருநெல்வேலி சந்திப்பு என மாநகரின் பெரும்பாலான இடங்களிலும், தாழையூத்து உள்ளிட்ட புகா் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.