முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் அதிகாலையில் திடீா் மழை

Updated On : 19 மார்ச், 2026 at 9:55 PM
பகிர்:

விராலிமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென மழை பெய்தது.

விராலிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாவே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 4 மணியளவில் திடீரென்று இடி மின்னலுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மழையால், விராலிமலை கடைவீதி, செக்போஸ்ட், எம்.ஜி.ஆா் நகா், முத்து நகா், சிதம்பரம் காா்டன், அருண் காா்டன், ஐயப்பா நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதி முழுவதும் காலை 11 மணி வரை குளிா் சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

ஆனால், இதைத் தொடா்ந்து நண்பகலில் இருந்து கடும் வெயில் வானிலை இருந்தது. இதனால், வயது முதிா்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினா்.