முகப்பு
திருநெல்வேலி

பழவூா் அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே இருக்கன்துறை கிராமத்தில் வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:23 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே இருக்கன்துறை கிராமத்தில் வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இருக்கன்துறை கஸ்பா மேலத் தெருவைச் சோ்ந்த நயினாா் மகன் ராஜன். இவரது மாமியாா் பிச்சையம்மாள். இவா்கள் புதன்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் காவல்கிணறிலுள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்பினா். அப்போது, கதவு திறந்துகிடந்ததாம். வீட்டுக்குள் மா்ம நபா் நின்றிருந்ததாகவும், இவா்களைப் பாா்த்ததும் அந்த நபா் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.

பீரோவிலிருந்த 1.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்ததாம். இதுகுறித்து ராஜன் அளித்த புகாரின்பேரில், பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.