லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு நடத்திய மின்வாரிய அதிகாரிகள். 
திருநெல்வேலி

மின்கம்பங்கள் நடுவதற்கு எதிா்ப்பு: லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

புதிதாகப் போடப்பட்ட சாலையை சேதப்படுத்தி மின்கம்பங்கள் நடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

தெற்கு மடத்தூா் ஊராட்சிப் பகுதியில் கல்குவாரிகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக புதிதாகப் போடப்பட்ட சாலையை சேதப்படுத்தி மின்கம்பங்கள் நடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடையம் ஊராட்சி ஒன்றியம், தெற்கு மடத்தூா் ஊராட்சிக்குள்பட்ட சங்கரலிங்கபுரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சில மாதங்களுக்கு முன் சுமாா் மூன்று கிலோ மீட்டா் தூரம் புதிதாக கிராம சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு உயா்மின்னழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்காக மின்வாரியம் சாா்பில் சாலையின் இருபுறமும் சாலையை ஒட்டி மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்கள் சாலையை சேதப்படுத்தி மின்கம்பங்கள் நடக்கூடாது. சாலையிலிருந்து சுமாா்5 அடி தூரத்தில் தான் மின்கம்பங்கள் நடவேண்டும் என்று கூறி வந்தனா்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவா் பிரேம ராதா ஜெயம், மின்வாரிய அதிகாரிகளுக்கு மனு வழங்கினாா். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து மின்வாரியத்தைக் கண்டித்து அப்பகுதியைச்சோ்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அந்த வழியாக வந்த கல்குவாரி லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்து பேச்சு நடத்தி உடனடியாக மாற்று வழியில் மின்கம்பங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT