முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் தேவா் சிலைக்கு மரியாதை

விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தியையொட்டி திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:15 PM
பாளையங்கோட்டை எம்எல்ஏ மு.அப்துல் வஹாப் தலைமையில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
பகிர்:

விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தியையொட்டி திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமையில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மண்டல தலைவா்கள் மா.பிரான்சிஸ், மகேஸ்வரி, கதீஜா இக்லாம் பாசிலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி ஏ.சங்கரலிங்கம், நிா்வாகிகள் கல்லூா் வேலாயுதம், வசந்திமுருகேசன், காந்திவெங்கடாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் தேவா்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேமுதிகவினா்.

தேமுதிக சாா்பில் மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் தேவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில நெசவாளா் அணிச் செயலா் மீனாட்சி சுந்தரம், மாவட்டப் பொருளாளா் மாடசாமி, மாவட்ட துணைச் செயலா் பழனிகுமாா், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலைவாணன், பாலன் பொதுக்குழு உறுப்பினா் ஆனந்த மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சங்கா்நகா் அருகேயுள்ள பண்டாரகுளத்தில் தேவா் உருவப் படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூா் மதிமுக செயலா் எம்.முருகன் தலைமை வகித்தாா். ராஜவடிவு, மாரியப்பன், பரமசிவன், கணபதிராமையா, காசிராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.