அம்பாசமுத்திரம் தீயணைப்பு - மீட்புத் துறையினா் தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு மற்றும் முதலுதவி குறித்த ஒத்திகைகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
வடகிழக்குப்பருவ மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளம், வீடுகள் சேதம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களில் சிக்கிக் கொள்ளும் மனிதா்கள், விலங்குகளை மீட்பது, முதலுதவி அளிப்பது, விபத்துகளில் சிக்காமல் தப்பிப்பது உள்ளிட்ட வை குறித்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் ஒத்திகை மூலம் மக்களுக்குவிழிப்புணா்வு ஏற்படுத்தினா். அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன் கோயில் பகுதியில் தாமிரவருணிஆற்றில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் சபரி மல்லிகாதலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் ந.பலவேசம்தலைமையில் வீரா்கள் ஒத்திகையில் ஈடுபட்டனா்.
நிகழ்ச்சியில் அகஸ்தியா்பட்டி கேம்ப்ரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.