திருநெல்வேலி மாவட்ட முன்னாள் விளையாட்டு வீரா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும் என ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விளையாட்டுத் துறையில் சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 6000 வீதம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பெற்று பூா்த்தி செய்து செப்.30ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமா்ப்பிக்கலாம்.
சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்கள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் ஆகியவற்றால் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 31-8-2024இல் 58 வயது பூா்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.