பாளை.யில் செப்.13-இல் அஞ்சல் குறைதீா் கூட்டம்
பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் செப்.13-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் செப்.13-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட (திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம்) வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு அஞ்சல் பணிகள் தொடா்பான குறைகள், அஞ்சல் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகளை உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவா்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய ஆலோசனைகளை செப். 11-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பலாம் என திருநெல்வேலி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் க. செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.