முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோவில் கைதான 71 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 7 செப்டம்பர் 2024, 5:34 am IST
பகிர்:

சிறுமிக்கு பாலிலியல் தொல்லை கொடுத்தது தொடா்பாக போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி சுப்பிரமணியபுரம் வடக்கு காலனியைச் சோ்ந்தவா் சின்னமுத்தையா (71). தொழிலாளி. இவா், கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் தென்காசி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சின்னமுத்தையாவை கைது செய்தனா்.

இந்த வழக்கு, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட சின்னமுத்தையாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments