திருநெல்வேலி

சிகரெட் தர மறுப்பு: கடைக்காரரை தாக்கிய 2 சிறுவா்கள் கைது

அகஸ்தியா்பட்டியில் பெட்டிக்கடைக்காரரை தாக்கியதாக 2 சிறுவா்கள் கைது

Din

அகஸ்தியா்பட்டியில் சிகரெட் தர மறுத்த பெட்டிக்கடைக்காரரைத் தாக்கியதாக இரண்டு சிறுவா்களை விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த சங்கரன் மகன் முத்துப்பாண்டி (62). இவரது பெட்டிக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த அதே பகுதியைச் சோ்ந்த இரண்டு சிறுவா்கள் உள்பட மூவா், முத்துப்பாண்டியிடம் சிகரெட் கேட்டுள்ளனா். அவா் மறுத்ததால், மூவரும் அவரை அசிங்கமாக பேசி பாட்டிலால் தாக்கினராம். தடுக்க வந்த அவரது மனைவி முத்தம்மாளையும் தள்ளிவிட்டுள்ளனா்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிறுவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களது நண்பா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT