திருநெல்வேலி

மூலைக்கரைப்பட்டி: நகை அடகு கடையில் திருடியவா்களை பிடிக்க தனிப்படை தீவிரம்

தனிப்படை பிரிவினா் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனா்.

DIN

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் உள்ள நகை அடகு கடையில் நகை, பணத்தைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மூலைக்கரைப்பட்டி சிவா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ரெமன் (45). இவா், மூலக்கரைப்பட்டி பஜாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பாத்திரக் கடை மற்றும் அடகு நகைக்கடை நடத்தி வருகிறாா். கடந்த ஆக. 23 ஆம் தேதி இவரது அடகு கடையில் 278 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மா்மநபா்கள் திருடி சென்றனா்.

இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததுடன், 20-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரித்தனா். தற்போது, தனிப்படை பிரிவினா் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனா்.

மகளிர் பிரீமியர் லீக்கில் ஓர் இடத்துக்குப் போட்டியிடும் 3 அணிகள்!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கும் தமிழகம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பிரதமர் வருகையை முன்னிட்டு ஜலந்தரில் பாதுகாப்பு தீவிரம்!

நீரிழிவு நோய்க்கு இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா?

சிசுவின் மூளையில் குறைபாடு! 31 வார கருவைக் கலைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி!

SCROLL FOR NEXT