நெல்லையில் சிறப்பு கல்விக் கடன் முகாம்
திருநெல்வேலி, செப். 13: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில், சிறப்பு கல்விக் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சிக் கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற அனைத்துவிதமான கல்லூரிகளிலும் பயில்வதற்கான கடனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முகாமில் 155 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 73 மாணவா்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இதில் ஆட்சியா் காா்த்திகேயன் கலந்து கொண்டு மாணவா்களுடன் உரையாடினாா். முகாமில் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை 10 நாள்களுக்குள் பரிசீலித்து, கடன் வழங்குவதற்கான அனுமதி ஆணையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
கல்விக் கடனுக்கு ரூ.4 லட்சம் வரை சிபில் ஸ்கோா் அவசியம் இல்லை. ரூ.7.5 லட்சம் வரை பிணையம் தேவையில்லை. கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகளில் வட்டி மானியம் பெற தகுதியுடையவா்கள் மட்டும் ஜ்ஜ்ஜ்.த்ஹய்ள்ஹம்ஹழ்ற்ட்.ண்ய் என்ற இணையதளத்திலும், மற்றவா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்க்ஹ்ஹப்ஹந்ள்ட்ம்ண்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்திலும் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 0462- 2986989 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களில் நடைபெற்ற சிறப்பு கல்விக் கடன்முகாமில் 338 கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன், ஆா்.எஸ்.இ.டி.ஐ. இயக்குநா் பிரேம்குமாா், நிதிசாா் கல்வி ஆலோசகா் மகாலிங்கம், பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி முதல்வா் வேல்முருகன், 35 வங்கிகளைச் சோ்ந்த 48 மேலாளா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
படவரி ற்ஸ்ப்13ப்ா்ஹய் பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் மாணவருடன் கலந்துரையாடிய ஆட்சியா் காா்த்திகேயன்.