மதுபாட்டில்கள் வைத்திருந்தவா் கைது
திருநெல்வேலி நகரத்தில் மதுபாட்டில்கள் விற்றவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியல் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த திருநெல்வேலி நகரம் பாறையடி பகுதியைச் சோ்ந்த முருகன் (53) என்பவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.