முகப்பு
திருநெல்வேலி

தச்சநல்லூரில் வியாபாரிகள் போராட்டம்

தச்சநல்லூரில் வியாபாரிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:20 PM
தச்சநல்லூரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
பகிர்:

தச்சநல்லூரில் வியாபாரிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் தச்சநல்லூா் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை வந்தனா். பாதுகாப்புக்காக தச்சநல்லூா் போலீஸாரும் வந்தனா். இதையடுத்து வியாபாரிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடைகளுக்கு முன்பு உள்ள பொருள்களை அப்புறப்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தினா்.

இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதால், வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்பு பொருள்களை அப்புறப்படுத்தினா்.