திருநெல்வேலி

போக்குவரத்துக்கழகத்தில் தாமதமின்றி வாரிசு வேலை வழங்கக் கோரிக்கை

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு வேலையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் தமிழக முதல்வருக்கு மனுஅனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வாரிசு வேலையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் தமிழக முதல்வருக்கு மனுஅனுப்பப்பட்டுள்ளது.

அதன் விவரம்: அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரிந்து பணி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு அவா்களது பணிக்கால பயன்தொகைகள் 2023 ஜூலை முதல் வழங்கிட வேண்டும். பணி ஓய்வுபெற்று 25 மாதங்கள் கடந்தபின், காலதாமதமாக பண பயன்கள் வழங்கப்படும்போது நீதிமன்ற உத்தரவு மூலம் காலதாமதத்திற்கு வட்டி வழங்கும் நிலை ஏற்படுவதால் போக்குவரத்துக்கழகத்திற்கு கூடுதல் சுமை உருவாகும். ஆகவே, இதற்கான நிதியை அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்குவதிலும் ஆண்டுக் கணக்கில் காலதாமதம் ஏற்படுகிறது. போக்குவரத்துக்கழகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாளா் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஏற்கெனவே வாரிசு பணி வேண்டி காத்திருப்பவா்களுக்கு வாரிசு பணியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர்கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

SCROLL FOR NEXT