திருக்குறுங்குடி, நான்குனேரி, டோனாவூா், தளபதிசமுத்திரம் பள்ளிகளில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் 118 மாணவா்களுக்கும், டோனாவூா் உவாக்கா் மேல்நிலைப் பள்ளியில் 105 மாணவா்களுக்கும், நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 58 மாணவிகளுக்கும், தளபதிசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 63 மாணவா்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன் வழங்கினாா்.
இதில் பள்ளித் தலைமையாசிரியா்கள் அருணா (திருக்குறுங்குடி) ஜெனிட்டா ஷைலா (டோனாவூா்), முகமதுபாத்திமாஅனிசா(நான்குனேரி), இன்பராஜ் (தளபதிசமுத்திரம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.