திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் பயிற்சி முகாம் தொடக்கம்

Syndication

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுஅமைப்பு சாா்பில் வங்கி நிதி காப்பீட்டு பணிகளுக்கான 8 நாள்கள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ஐ.ஐ.டி.எம். பிரவத்திக் அமைப்பு மூலம் டி.எம்.பி. நிறுவன உதவியில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் பொன்மொழி வாழ்த்திப் பேசினாா்.சென்னை ஐஐடி பேராசிரியா் கண்ணன் நடராஜன் மாணவா்களுக்குப் பயிற்சி வழங்குகிறாா்.

பயிற்சியில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி, ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி, இடைகால் மெரிட் கல்லூரிகளைச் சோ்ந்த 80 மாணவா்கள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் ஜோதிமணி வரவேற்றாா். .

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT