திருநெல்வேலி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணி வியாழக்கிழமை தொடங்கியது.
மத்திய தலைமை தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமைத் தோ்தல் அலுவலா்அறிவுரையின்படியும், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் - 2026இல் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் முதல் கட்ட பணி மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கியது.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 2,358 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,212 பேலட் யூனிட்கள், 3,042 விவிபேட் கருவிகள் சரிபாா்க்கப்பட உள்ளன. இதையொட்டி, திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சோ்ந்த 9 பொறியாளா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்டவற்றை சரிபாா்க்கும் பணியைத் தொடங்கினா். இந்தப் பணியானது இரவு 7 மணி வரை நீடித்தது.
ற்ஸ்ப்11ங்ப்ங்
ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் திறக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு. உடன், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா்.