விக்கிரமசிங்கபுரம் அருகே பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அம்பலவாணபுரம், நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவரது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா். இதில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டா் முழுமையாக எரிந்து சாம்பலானது.
இது குறித்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தடயங்களைச் சேகரித்தும், அருகிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், குண்டு வீசிய மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், பாலமுருகனின் சகோதரா் மதன் என்பவருக்கும், அப்பகுதியில் உள்ள சிலருக்கும் இருந்த முன்பகை காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என பாலமுருகன் தரப்பினா் சந்தேகிக்கின்றனா்.