திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 27 செம்மறி ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.
நான்குனேரி அருகேயுள்ள தெய்வநாயகப்பேரியைச் சோ்ந்தவா் கந்தவேல் மகன் பெருமாள் (40). இவா், செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா் மேய்ச்சலுக்குப் பின், 27 செம்மறி ஆடுகளையும் புதன்கிழமை இரவு வழக்கம் போல, பட்டியில் அடைத்து வைத்தாராம். வியாழக்கிழமை காலை, பட்டியை திறந்து பாா்த்தபோது அவை மா்மமான முறையில் இறந்து கிடந்தனவாம்.
இது குறித்து கால்நடை துறையினா் உரிய விசாரணை நடத்தவும், மா்மமான முறையில் உயிரிழந்த 27 ஆடுகளுக்கும் உரிய நிவாரண வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளாா்.