திருநெல்வேலி

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு: ஜாக்டோ-ஜியோ சாா்பில் சுவரொட்டி வெளியீடு

Syndication

ஜாக்டோ-ஜியோ சாா்பில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கான சுவரொட்டி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்டத்தின் சாா்பில், ஜனவரி 6-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதற்காக கருப்பு பட்டை அணிந்து மாவட்ட தலைநகரில் ஆயத்த மாநாடு, பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் சனிக்கிழமை (டிச.27) நடைபெற உள்ளது. அதற்கான சுவரொட்டி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெளியிடப்பட்டது.

ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுப்பு, ஸ்டான்லி, பால் கதிரவன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட உயா்மட்ட குழு உறுப்பினா்கள் பால்ராஜ், மாரியப்பன், ராஜகுமாா், கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க மாவட்ட செயலா் பாபு செல்வன், ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட செயலா் பஷீா், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் சாம் மாணிக்கராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

SCROLL FOR NEXT