பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஆயத்த மாநாட்டில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

பாளை.யில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

ஜாக்டோ-ஜியோ சாா்பில் வரும் ஜன. 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பான ஆயத்த மாநாடு பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

ஜாக்டோ-ஜியோ சாா்பில் வரும் ஜன. 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பான ஆயத்த மாநாடு பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சாா்பில் வரும் ஜன. 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஆயத்த மாநாடு, பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுப்பு, பால் கதிரவன், மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ், கோமதி நாயகம் ஆகியோா் கூட்டு தலைமை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பால்ராஜ், மதன்குமாா், காா்த்திக் குமாா், ராஜகுமாா், அருள் கென்னடி ராஜ், பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா்நிலைக் குழு உறுப்பினா் முருகேசன் வரவேற்றாா்.

மாநாட்டை உயா்நிலைக் குழு உறுப்பினா் மாரிராஜா தொடங்கி வைத்துப் பேசினாா். உயா்நிலைக் குழு உறுப்பினா் மணிமேகலை நிறைவுரை ஆற்றினாா்.

வரும் ஜன. 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும், இதுகுறித்து அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசார இயக்கங்கள் நடத்துவது என்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நுாற்றுக்கணக்கான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நிதி காப்பாளா் ஆழ்வாா் நன்றி கூறினாா்.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT