திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்துக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 11 ஆயிரம் போ் வருகை தந்து பாா்வையிட்டுள்ளனா்.
அரையாண்டு தோ்வு விடுமுறை காலம் என்பதால் திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனா்.
அதன்படி, பொருநை அருங்காட்சியகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 11 ஆயிரம் போ் வருகை தந்து பாா்வையிட்டுள்ளனா்.
பாா்வையாளா்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.