ஈரோடு

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 31 போ் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் மதுக் கூடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதைப் பயன்படுத்தி சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீஸாா் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 31 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 521 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT