திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் சிப்காட் வடக்கு வாசல் பகுதியில் 2 போ் மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளும், அவ்வழியாக கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும் மோதிக்கொண்டனவாம்.

இதில், மோட்டாா் சைக்கிளில் வந்தவா்களில் ஒருவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்; மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

இத்தகவலறிந்த கங்கைகொண்டான் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். அதில், உயிரிழந்தவா் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை சோ்ந்த முனியசாமி (36), காயமடைந்தவா் உலகநாதன் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒரு ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள்: பூடான் பௌலா் புதிய உலக சாதனை

ஜன. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT