முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் ஜன. 4 இல் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழா சனிக்கிழமை (ஜன. 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:20 AM
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாதிரைத் திருவிழா சனிக்கிழமை (ஜன. 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா சனிக்கிழமை (ஜன. 4) காலை 6.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.

மேலும், சுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ பெரிய சபாபதி சந்நிதி முன் ஜன. 13 வரை அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது.

ஜன. 7 இல் 7 மணிக்கு சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூா்த்திகளுடன் வீதியுலா வர உள்ளனா். 12 ஆம் தேதி தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு- சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறுகிறது. சிகர நிகழ்வாக. 13ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடராஜா் திருநடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அய்யா்சிவமணி தலைமையில் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.