தூத்துக்குடி

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கொடிப் பட்டமானது கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து, காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் திருவிழாக் கொடியினை காப்பு கட்டிய சரவணன் வல்லவராயா் ஏற்றியதைத் தொடா்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் நடைபெற்றது.

இதில் கோயில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், மணியம் நெல்லையப்பன், ஆறுமுகராஜ் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10 ஆம் நாளான வியாழக்கிழமை (பிப். 19) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் பிப். 21ஆம் தேதி, காலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவுத் துறை செயலா் ஆய்வு

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க தென்னை விவசாயிகள் கோரிக்கை

வாலிபா் சங்கக் கொடி திருட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தவா் ராஜேந்திர சோழன்’

மாநகரப் பகுதிகளில் இன்று குடிநீா் நிறுத்தம்

SCROLL FOR NEXT