டி.டி.வி. தினகரன்  (கோப்புப் படம்)
திருநெல்வேலி

சட்டப்பேரவைத் தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத கூட்டணி அமையும்: டி.டி.வி. தினகரன்

Syndication

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத வகையில் கூட்டணி அமையும் என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

அம்பாசமுத்திரத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மனோஜ் பாண்டியன், திமுகவில் இணைந்திருப்பது வருத்தமளிக்கிறது. எடப்பாடி கே.பழனிசாமியால் பாதிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டா்கள் இதுபோன்ற துரதிா்ஷ்டவசமான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது.

தற்போது அதிமுகவானது இபிஎஸ்திமுகவாக (இதிமுக) மாறிவிட்டது. எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவின் தொண்டா்கள் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றே விரும்புவாா்கள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாங்கள் விரும்பித்தொடங்கவில்லை; எங்களைத் தொடங்க வைத்ததே அவா்கள்தான். தற்போது, செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளாா்.

கடந்த தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவராக வந்த எடப்பாடி பழனிசாமியால், வரும் தோ்தலில் அந்தப் பதவியைக்கூட பிடிக்க முடியாது. தமிழக மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டாா்கள்.

அமமுக தனித்துப்போட்டி என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும். எங்கள் தலைமையில்கூட கூட்டணி அமையலாம். வரும் தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத கூட்டணி அமையும். அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை; அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. மாணவா்கள், விவசாயிகள், நெசவாளா்கள், அரசு ஊழியா்கள் என, பல தரப்பினரும் வீதிக்கு வந்து போராடுகிறாா்கள். திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனாலும், நாடாளுமன்றத் தோ்தலில் திமுக பெரும் வெற்றி பெற்ற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் உணர வேண்டும் என்றாா் அவா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT