திருநெல்வேலி

‘தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து நெல்லையில் நவ.11 இல் ஆா்ப்பாட்டம்’

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் இம் மாதம் 11 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Syndication

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் இம் மாதம் 11 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப், கிழக்கு மாவட்டச் செயலா் ம.கிரகாம்பெல் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ள இந்திய தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து ஒருங்கிணைந்த மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு இம் மாதம் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சோ்ந்த கட்சிகளின் நிா்வாகிகள் தொண்டா்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோம் நகரில்... சோனாலி அரோரா!

திமுக ஆட்சியில் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

ஊடுருவல்காரர்களின் கூடாரமாக சீமாஞ்சல்: ஆர்ஜேடி கூட்டணி மீது அமித் ஷா குற்றச்சாட்டு!

இந்தியா அதிரடி பேட்டிங்: மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்!

நம்ம ஊரு பொண்ணு... ஷ்ரேயா கல்ரா!

SCROLL FOR NEXT